அய்யனாரை அறிவோம்

ஐயனை அறிந்து கொள்வோம்

தோற்றம்
தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது.  இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், மகாவிஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். 
 பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார்.  அவரது தோற்றத்தைக் கண்டவர்களின்  மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. 

மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார்.  இதனால் வேள்வி தடைபட்டது. 

ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார்.

அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார்.

ஐயனார் மாசிமாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்.
 
வடிவம் ஐயனார் சர்வேசுவரனைப் போன்ற தோற்றம் உடையவராய் இருப்பார்.  கிழக்குத்திசை நோக்கி அமர்ந்திருப்பார்.   மார்பில் பூணு}ல் அணிந்திருப்பார்.  இளைஞரைப்போன்றவர்.   விரிந்து பரந்த முகத்தையும் மார்பையும்  உடையவர்.   தங்கநிறம் அல்லது சிவப்பு  நிறமானவர். கீரீடம் அணிந்திருப்பார்.  கருத்த அடர்த்தியான சுருண்ட முடியை உடையவர். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும்  அணிந்திருப்பார்,மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார்.  சந்தனம் பூசியிருப்பார். பீடத்தின் மீது நன்கு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்.
வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார்.  இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். 

கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார்.  ஐயனார் நிற்கும் ​​கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர். சாந்த குணமுடையவர். நாய், கோழி, யானை, குதிரை இவற்றுடன் விளையாடும் குணம் உடையவர்.   பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் பாடிக்கொண்டிருப்பவர்.  யானை வாகனம் உடையவர்.  யானைக்கொடிமரத்தை உடையவர்.   வெள்ளைக்குதிரையை உடையவர்.

தேவியர் இருவர்
சிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார்.   இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர். 

பாலசாஸ்தா ஐயனார் மிகவும் துடுக்கானவராகவும் துடியானவராகவும் விளங்குகின்றார்.

பொதுவாக, ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர்,  ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர்.  பூலோகத்தில் அவதரித்தவர்.  எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.


இவர்களது தலையானது ஐயனாரின் தோள்ப்பட்டை உயரத்தில் இருக்கும்.  ஐயனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும்  அமர்ந்திருப்பர்.

புஷ்கலை என்றால் பூவைப்போன்ற பண்புடையவள் என்று பொருள்.  பூ என்று பொதுவில் சொன்னால் அது தாமரையைக் குறிக்கும்.  எனவே புஷ்கலை என்றால் தாமரை மலரைப்போன்றவள்.  மலர்ந்த முகமுடையவள், பரந்த எண்ணமுடையவள், மணம் நிறைந்தவள்.   தங்க நிறமானவள். 

பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.  

பாரிவார தெய்வங்கள்
இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன் ஈசானியன் ஆகிய எட்டு திசைதெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.

ஐயனாhpன் பாpவார தெய்வங்களாக கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும், காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த(ஏழு) கன்னியர்கள் முதலிய  பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.  நாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.

உணவு
ஐயனார் சுத்தசைவமாகும். சர்க்கரைப்பொங்கல் படைக்கப்படும்.  ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது  ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள்.  கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.

கோயில்
ஐயனார் தோன்றிய இடம் கண்மாய்க்கரையாகும். இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள் கண்மாய்க் கரையில் மடை அல்லது களுங்கு அருகே இருக்கும்.   சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் கோயில் இருக்கும்.

கோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே சுப்பிரமணியரும் உள்ளனர்.
 

கோயில் பூசாரி
பூணூல்

திருவிழாக்கள்
சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.   அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.
 பூணூல் அணிந்தும்  அசைவம்(மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாhpகளாக உள்ளனர்.   பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.

 எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.

 தைப்பொங்கலை அடுத்து வரும் மஸ்ரீ;சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில் காளைமாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர்.   இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.

 புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர்.   சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.

முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர்.  சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.

பிரசாதம்
சிவன்கோயிலில் விபூதியும், அம்மன்கோயிலில் குங்குமமும், விஷ்ணு கோயிலில் துளசித் தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படும்.  ஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமானநீரும் பிரசாதமாக வழங்கப்படும்.  இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும்.

காவலுக்குக் கருப்பர்
ஐயனாhpன் பரிவார தெய்வங்களில் ஒன்றhன கருப்பர் காவல் தெய்வமாவார்.  இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி,  நாய் உடன் வர,  ஊரை வலம் வந்து காவல் செய்வார்.  
அகிலமே வணங்கும் ஐயனார்
ஐயனார் என்பவர் எல்லோருக்கும் தலைவன் ஆவார். இதனால் அனைத்து சமூகத்தினரும் சாதிவேறுபாடு இல்லாமல் ஐயனாரைக் குலதெய்வமாக வணங்கி வழிபடுகின்றனர். இவ்வுலகம் முழுமையும் இவரது தலைமைக்குக் கட்டுப்பட்டே நடக்கிறது. 

வழிபடுவதால் பயன்
ஐயனாரை வழிபடுபவர்கள், "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதற்கு உதாரணமாய் இருப்பர்.   பிறருடன் உறவுமுறை கொண்டு பழகுவர்.  பிறரிடம் கேலி கிண்டல் பேசி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வர்.

ஐயனாரை வழிபடுவதால், பில்லி சூனியம் விலகும், நல்லபுத்தி கிடைக்கும். எதையும் ஆராய்ந்தறிந்து செய்வர். தவறு செய்தவர்களிடமும் அன்பாக இருப்பர். நல்ல தீர்ப்பு வழங்குவர். வீடுகளில் வளர்ப்புப் பிராணிகள் நிறைந்திருக்கும். தண்ணீரும் விவசாயமும் பெருகும்.  தானியம் சேரும்.  நற் சுகத்தை அடைவர். 

ஐயனாரும் ஐயப்பனும்
சிவபெருமானுக்கும் மோகினி(பெண்வடிவில் இருந்த மகாவிஷ்ணு)க்கும்  பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர்.  இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும்.  ஆனால் தம்பதிசமேதராக தேவியருடன் வீற்றிருந்து அருளும் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பதைக் கீழ்க்கண்ட செய்திகளால் நன்கு அறியலாம்.
 
ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர்.   ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர்.

ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால்  தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால்,

ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர்.
ஐயனார் ஒரு குடும்பஸ்தர்.  இரண்டு தேவியருடனும் பாpவார தெய்வங்களுடனும் ஆட்சி செய்பவர்.   ஆனால் ஐயப்பன் ஒரு யோகி.   சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.

ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார்.  ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.
இதனால் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பது விளங்கும்.
ஐயனாரை வணங்கி வழிபட்டு வாழ்பவர்களின் வாழ்க்கையானது  பிறருக்குத் துன்பமில்லாமல் மகிழ்ச்சி யைக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வோளண்மை செய்தல் பொருட்டு (குறள் -81)
என்ற குறளுக்கு இலக்கணமாக அனைத்து நலன்களையும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர் என்பது உறுதி.
ஐயனாரை வணங்குவோம்
அனைத்து நலன்களையும் பெறுவோம்

கருத்துகள்

  1. எங்கள் குல சாமி சன்னாசி சாமி அய்யனார் கோவில் பரிவார தெய்வங்களும் ஓன்று... அவரின் கதை தெரிந்தால் பகிரவும். nshanmuga1@gmail.com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்